திலக் வர்மா
கிரிக்கெட்

இஷான் கிஷன், திலக் வர்மா அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

இஷான் கிஷன் 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார்.

இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்ா 8 ரன்களில் வெளியேறினார்.

இஷான் கிஷன் அதிரடி

3-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அய்யர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடியது. அரைசதம் அடித்த இஷான் கிஷன் 44 பந்தில் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

திலக் வர்மா 60 ரன்கள்

திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 60 ரன்கள் விளாச, இந்தியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது.