கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி: அரை சதமடித்த இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர்

இஷான் கிஷன் 32 பந்தில் 5 சிக்சர், 5 பவுன்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்தியாவின் இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் அடித்தனர்.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 3-1 என தொடரை கைப்பற்றியது.

முதல் 3 டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 4வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 5-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. தொடக்கத்தில் இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் சர்மா ஒரு ரன்னும், சஞ்சு சாம்சன் 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இஷான் கிஷன், ஷ்ரேயஸ் அய்யர் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தது.

3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 43 பந்தில் 93 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்தில் 5 சிக்சர், 5 பவௌண்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து ஆடிய ஷ்ரேயஸ் அய்யர் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 11.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன் எடுத்திருந்தது.

SCROLL FOR NEXT