பிரான்சைஸ் அடிப்படையிலான ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் சீசனில் ஐந்து அணிகள் பங்கேற்றன. அதன்பின் லீக் நடத்தப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வருடம் லீக்கை நடத்த ஆப்கானிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஐந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த நிலையில் கேப்டன், தலைமை பயிற்சியாளர், ஆலோசகர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாளை வீரர்கள் ஏலம் நடைபெற இருக்கிறது.
கந்தகார் வாரியர்ஸ்: ரஷித் கான் (கேப்டன்), ரவி போபரா (தலைமை பயிற்சியாளர்), இர்பான் பதான் (ஆலோசகர்).
ஆச்செல் யுனைடெட் காபுல்: அஸ்மதுல்லா ஓமர்சாய் (கேப்டன்), ஷேன் மெக்டெர்மொட் (தலைமை பயிற்சியாளர்), நிகில் சோப்ரா (ஆலோசகர்)
நந்தகார்: ரஹ்மதுல்லா குர்பாஸ் (கேப்டன்), டோபி ராத்போர்டு (தலைமை பயிற்சியாளர்), மார்க் பவுச்சர் (ஆலோசகர்).
பாக்தியா: ரஹ்மத் ஷா (கேப்டன்), அசார் மெஹ்மூத் (தலைமை பயிற்சியாளர்), வக்கார் யூனிஸ் (ஆலோசகர்).
பால்க் அணி: இப்ராஹிம் ஜத்ரன் (கேப்டன்), மிக்கி ஆர்தர் (தலைமை பயிற்சியாளர்), திலகரத்னே தில்சன் (ஆலோசகர்).
வனிந்து ஹசரங்கா, ரீசா ஹென்ரிக்ஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, ரோவ்மேன் பொவேல், இம்ரான் தாஹிர், அகீல் ஹொசைன், முஷ்பிகுர் ரஹிம், மெஹிதி ஹசன் மிராஸ், குசால் பெரேரா, இமாம்-உல்-ஹக், சைம் ஆயுப், பஹர் ஜமான், சரித் அசலங்கா, லிட்டோன் தாஸ், ஷாகிப்அல் ஹசன், ஷஹிப்சதா பர்ஹான் ஆகியோர் விண்ணபித்துள்ளனர்.
2018 சீசனில் கிறிஸ் கெய்ல், பிரெண்டர் மெக்கல்லம், ஷாஹித் அப்ரிடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
2026 ஆப்கானிஸ்தான் பரீமியர் லீக் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.