அயர்லாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 343 ரன்களைக் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி வென்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் மற்றும் செடிகுல்லா அடல் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.
2வது விக்கெட்டுக்கு இணைந்த இந்த ஜோடி 231 ரன்கள் சேர்த்த நிலையில், இப்ராகிம் ஜட்ரன் 107 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடிய செடிகுல்லா அடல் 143 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அயர்லாந்து சார்பில் பிரியன் மெக்டொனவ் 3 விக்கெட்டும், மார்க் அடைர், கேவின் ஹோய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 344 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களமிறங்குகிறது.