நேற்று, குராஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத்தை 155 ரன்களுக்கு கட்டுப்படுத்தி அதன்பின் 156 என்ற இலக்கை பெங்களூரு எளிதில் எட்டி கோப்பையை கைப்பற்றியது.
வெற்றியாளரான ஆர்சிபிக்கு ரூ.20 கோடியும், ரன்னரான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில் போட்டிக்குப் பிறகு, குஜராத் அணி வீரர்கள் மைதானத்திலிருந்து தங்கும் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த பேருந்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
ஊழியர்கள் உடனடியாக அனைத்து வீரர்களையும் பாதுகாப்பாகக் கீழே இறங்கச் செய்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வீரர்கள் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சாலையில் தவித்தனர். இருப்பினும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதால் நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.