ஐ.பி.எல்.

WPL Eliminator 2026: 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்... இலக்கை எட்டி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுமா டெல்லி?

இப்போட்டியில் வெற்றிப்பெறும் அணி இறுதிப்போட்டியில் பெங்களூருவை சந்திக்கும்நடப்பு சீசனின் லீக் போட்டிகளில் குஜராத் அணி டெல்லியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. வதோராவில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் டெல்லி அணிக்கு வெற்றி இலக்காக 169 ரன்களை நிர்ணயித்துள்ளது.

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 62 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் சினெல்லே ஹென்றி 3 விக்கெட்டுகளும், நந்தினி ஷர்மா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தொடர்ந்து டெல்லி பேட்டிங் செய்துவருகிறது. இரண்டு அணிகளில் எந்த அணி வெற்றிப் பெறுகிறதோ அந்த அணி நாளை மறுநாள் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். இந்த சீசனின் லீக் போட்டிகளில் குஜராத் அணி டெல்லியை இரண்டு முறை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

SCROLL FOR NEXT