கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா மைதானத்தில் எமோஷனலாகி கண்கலங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வளங்களில் வைரலானது.
இந்நிலையில், இப்போட்டிக்கு பின் பேசிய அவர், சிஎஸ்கே அணி உடனான பிரிவு கடினமாக இருந்ததாக கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிஎஸ்கே அணி உடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது. ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாக பயணித்துள்ளேன். கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன். ஆனால் இதுவும் வாழ்க்கையின் ஒரு பகுதி என தேற்றிக் கொண்டேன். நான் முதன்முதலில் கோப்பை வென்ற அணிக்கே மீண்டும் திரும்புவதுதான் இதில் நல்ல விஷயம் என ஜடேஜா கூறினார்.