ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று நியூ சண்டிகரில் நடந்த எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 243 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய ஐதராபாத் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்தில் 97 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 15 ஆட்டங்களில் 680 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் 652 ரன்னும், 3வது இடத்தில் ஐதராபாத் அணியின் கிளாசன் 624 ரன்னும் குவித்துள்ளனர்.