நடப்பு ஐபிஎல் தொடரில் முல்லன்பூர் மைதானத்தில் நேற்று நடந்த குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் சிக்சர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 47 பந்துகளில் 96 ரன்கள் குவித்து சதத்தை நூலிழையில் தவறவிட்டார். இதன்மூலம் அந்த அணி 20 ஓவரில் 214 ரன்கள் குவித்தது.
இந்த இலக்கை துரத்திய குஜராத் அணி கில்லின் சதம் மற்றும் சுதர்சனின் அரை சதத்தால் வெற்றி பெற்றது. இதன்மூலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கு குஜராத் தகுதிபெற்றள்ளது. இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு சாம்பியன் பெங்களூருவுடன் மோதுகிறது.
இதற்கிடையே, ராஜஸ்தான் அணியின் இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் பல சாதனைகளைத் தகர்த்து புதிய வரலாறு படைத்து வருகிறார்.
இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 1,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
சூர்யவன்ஷி இந்த மைல்கல்லை எட்ட வெறும் 440 பந்துகளை மட்டுமே எடுத்துக்கொண்டார். இதற்குமுன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸல் 545 பந்துகளில் 1,000 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அதை சூர்யவன்ஷி தற்போது முறியடித்துள்ளார்.