ஐ.பி.எல்.

எங்களோட திட்டம் இதுதான் - பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஓபன் டாக்

சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது திட்டம் குறித்த ரகசியத்தை வெளிப்படையாக கூறினார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது திட்டம் குறித்த ரகசியத்தை வெளிப்படையாக கூறினார்.

ஷ்ரேயாஸ் கூறியதாவது:-

டிரெஸ்ஸிங் ரூமில் நாங்கள் எதுவும் திட்டமிட்டுச் செய்யவில்லை. ஆனால் ஒன்று மட்டும் முடிவு செய்திருந்தோம். வெளியே இருப்பவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக விளையாடாமல், அணிக்குள் ஒருவருக்கொருவர் பார்த்து வியக்கும் வகையில் விளையாட வேண்டும் என முடிவு செய்தோம்.

இது ஆட்டத்தில் எங்களுக்கு ஒரு தெளிவைத் தருகிறது. வெளியே இருப்பவர்களை விட, அணிக்குள் ஒருவருக்கு ஒருவர் சவால் விட்டுக்கொண்டு விளையாடுகிறோம். முதல் இரண்டு போட்டிகளிலேயே அனைவருக்கும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அழுத்தமான சூழல்களை எப்படிக் கையாள வேண்டும் என்ற அனுபவத்தைத் தருகிறது.

அதே நேரத்தில் ஸ்லோ ஓவர் ரேட் விவகாரத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். கடைசி 2 ஓவர்களில் 5 பீல்டர்கள் உள்வட்டத்திற்குள் வரும்போது, பந்துவீச்சாளர்களுக்குப் பந்துவீச ஒரே ஒரு லைன் மட்டுமே கிடைக்கிறது. இது சவாலான விஷயம். இதில்தான் நாங்கள் இனி கவனம் செலுத்த வேண்டும்.

என அவர் கூறினார்.