ஐ.பி.எல்.

வங்கதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி: ஐபிஎல் நேரடி ஒளிபரப்பு ரத்து

வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் நேரடி ஒளிபரப்பு உரிமம் தொடர்பாக ஜியோஸ்டார் நிறுவனம் மற்றும் வங்கதேசத்தின் முன்னணி விளையாட்டு சேனலான டிஸ்போர்ட்ஸ் இடையே ஏற்பட்ட உடன்பாடு முறிந்ததை அடுத்து, வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோஸ்டார் நிறுவனம் தனது ஒளிபரப்பு உரிம ஒப்பந்தத்தை டிஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் நீட்டிக்காததே இந்தத் தடைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், வங்கதேசத்தில் வேறு எந்த உள்ளூர் தொலைக்காட்சியும் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெறவில்லை. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் போட்டிகளைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு இல்லையென்றாலும், சில சர்வதேச ஓடிடி தளங்கள் மூலம் போட்டிகளைப் பார்க்க முடியுமா என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் நிலையில், இந்தத் தகவல் அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.