ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பேட்டிற்கும் பந்திற்கும் இடையில் சமநிலை நிலவ வேண்டும் என்றால் இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று சச்சின் தெண்டுல்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டி20 கிரிக்கெட்டில் வடிவில் 20 ஓவர்கள்தான விளையாட வேண்டும். அப்படியிருக்கும்போது, நீங்கள் கூடுதலாக ஒரு பேட்டரை சேர்த்தீர்கள் என்றால், ஏற்கனவே சவால்களை சந்தித்து வரும் பந்து வீச்சாளர்களுக்கு இது கூடுதல் சவாலாக அமையும். இதை பேலன்ஸ் அற்றவை என்று நான் பார்க்கிறேன்.
தற்போது 6 ஓவர் பவர்பிளே என்பதை இரண்டாக பிரிக்க வேண்டும். முதல் 4 ஓவர் பேட்டர்கள் பவர்பிளே. தற்போது இருப்பது போன்று 2 வீரர்கள் மட்டுமே உள்வட்டத்திற்கு வெளியில் இருக்க வேண்டும். 2-வது பவர்பிளே பந்து வீச்சு அணிக்கு கொடுக்க வேண்டும். அவர் இந்த பவர்பிளேயை எப்போது வேண்டுமென்றாலும் எடுத்து்க கொள்ளலாம். அப்போது கூடுதலாக ஒரு பீல்டரை உள்வட்டத்திற்கு வெளியே வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம்.
ஒரு பந்து வீச்சாளர் 5 ஓவர்கள வீச அனுமதிக்க வேண்டும். நல்ல பந்து வீச்சாளர் கூடுதலாக ஒரு ஓவர் வீசுவதை பார்க்க விரும்பமாட்டீர்களா?. பேட்டர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது, சிறந்த பந்து வீச்சாளர் ஏன் 5 ஓவர்கள் வீசக்கூடாது?.
இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.