கோவையில் இன்று தாமரை சின்னத்துடன் வாக்கு சேகரித்த நடிகை நமீதா. 
ஐ.பி.எல்.(IPL)

மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க- கமல்ஹாசன் மீது நமீதா மறைமுக தாக்கு

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.

மாலை மலர்

கோவை:

கோவை சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் களமிறங்கி உள்ளார். அவரை ஆதரித்து இன்று நடிகை நமீதா கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். கையில் தாமரை சின்னத்தை பிடித்தபடி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது கமல்ஹாசனை மறைமுகமாக சாடி அவர் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் மத்தியில் அவர் பேசுகையில் தமிழகம் கலாசாரம், கடவுள் நம்பிக்கை உள்ள பூமி. அந்த கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவரை நம்பி நீங்கள் எப்படி ஓட்டுப் போட முடியும். எனவே மக்களாகிய நீங்கள் சிந்தித்து உள்ளூர் சகோதரிக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்.

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். கோவையில் தாமரை மலரும். தமிழகத்தில் தாமரை வளரும். மச்சான்ஸ் தாமரைக்கு ஓட்டு போடுங்க. தாமரை மலரும். தமிழ்நாடு வளரும்.

இவ்வாறு அவர் கூறினார்.