பிரதமர் மோடி 
ஐ.பி.எல்.

2 நாட்கள் பிரசாரம்... 30ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

வரும் 26ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

சென்னை:

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். தலைவர்களின் சூறாவளி பிரச்சாரங்களால் தொண்டர்கள் சுறுசுறுப்பாக களப்பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழகம் வருகிறார். 30ம் தேதி தாராபுரத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அதன்பின்னர் ஏப்ரல் 2ஆம் தேதி மதுரை, நாகர்கோவிலில் பிரசாரம் செய்ய உள்ளார்.

வரும் 26ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதேபோல் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் தமிழகத்தில் பிரசாரம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.