கடம்பூர் ராஜூ 
ஐ.பி.எல்.

கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ வெற்றி முகம்

கோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 5,728 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கோவில்பட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட்டார். அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே டிடிவி தினகரனும்,  கடம்பூர் ராஜூவும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். தற்போதைய நிலவரப்படி சுமார்  5,728 வாக்குகள் வித்தியாசத்தில் கடம்பூர் ராஜூ முன்னிலையில் உள்ளார். கடம்பூர்  ராஜூ 36842 வாக்குகளும், டிடிவி தினகரன் 31114 வாக்குகளும், பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT