பாஜகவில் இணைந்த திமுக எம்எல்ஏ சரவணன் 
ஐ.பி.எல்.

பாஜகவில் இணைந்தார் திமுக எம்எல்ஏ சரவணன்

2019ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சரவணன் வெற்றி பெற்றார்.

சென்னை:

தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திருப்பரங்குன்றம் மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாலும், மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததாலும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ சரவணன் பாரதிய ஜனதாவில் இணைந்துக் கொண்டார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு சரவணன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT