தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு 
ஐ.பி.எல்.(IPL)

வாக்காளர் தகவல் சீட்டில் புகைப்படம் இடம்பெறாது - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6 அன்று ஒரே கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்; வாக்காளரின் புகைப்படம் இடம்பெறாது என்றார்.