10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.
ஐதராபாத் ராஜிவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
3வது ஓவரின் 2வது பந்தில் டிராவிஸ் ஹெட் 7 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய கேப்டன் இஷான் கிஷன் 4வது ஓவரின் 3வது பந்தில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, பவர் பிளே முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.
லக்னோ சார்பில் ஷமி 2 விக்கெட்டும், பிரின்ஸ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.