நடப்பு ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டி அகமதாபாத்தில் நேற்று நடந்தது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டினார்.
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் இன்னிங்சின் 7-வது ஓவரின் முதல் பந்தில் அவர் தனது 36-வது ரன்னை எடுத்து 6,000 ரன்கள் எடுத்தார்.
18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது 7-வது ஓவரின் முதல் பந்தில் நூர் அகமதுவின் பந்துவீச்சை எதிர்கொண்ட சுப்மன் கில், ஒரு சிக்சர் அடித்து 6,000 ரன்களைக் கடந்தார். இந்த சிக்சர் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 200-வது சிக்சரையும் அவர் பூர்த்தி செய்தார்.
இச்சாதனையின் மூலம் டி20 கிரிக்கெட்டில் மிக வேகமாக 6,000 ரன்களை கடந்த 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றார்.
இந்தப் பட்டியலில் கே.எல் ராகுல் 166 இன்னிங்ஸ்களிலும், விராட் கோலி 184 இன்னிங்ஸ்களிலும் இந்த மைல்கல்லை எட்டிய நிலையில், கில் 185 இன்னிங்ஸ்களில் 6,000 ரன்களைக் கடந்துள்ளார்.