Yash Dayal  
ஐ.பி.எல்.

பாலியல் குற்றச்சாட்டு: RCB அணியில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா யாஷ் தயாள்?

RCB அணியின் பயிற்சியில் யாஷ் தயாள் கலந்துகொள்ளாதது இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.

ராயல்' சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். உத்தரப் பிரதே சத்தை சேர்ந்த இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது.

காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் யாஷ் தயாள் மீது பாலியல் புகார் அளித்தார். 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்தார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து உத்தரப் பிரதேச கிரிக்கெட் சங்கம் நடத்தும் 20 லீக் தொடரில் விளையாட யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், RCB அணியின் பயிற்சியில் இடம்பெறாததாலும் அணியின் பேருந்தில் அவரது புகைப்படம் பயன்படுத்தாமல் இருப்பதாலும் அணியிலிருந்து ஒதுக்கப்படுவதாக யாஷ் தயாள் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளார்.

2025ல் போக்சோ வழக்கில் கைதான இவர் தற்போது ஜாமினில் உள்ளார். மேலும் 2026 IPL தொடருக்கு RCB தக்கவைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT