ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு: லக்னோ முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 64-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, லக்னோ அணி முதலில் களமிறங்குகிறது.

புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் அணி 5-வது இடத்திலும், லக்னோ அணி 10-வது இடத்திலும் நீடிக்கிறது.