ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு

ராஜஸ்தான் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 16-வது லீக் போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆர்சிபி அணி தான் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி முதல் தோல்வியைச் சந்திக்கும்.

கவுகாத்தியில் லேசான மழை பெய்ததால் டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆர்சிபி அணி முதலில் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணியில் துஷாருக்கு பதிலாக பிரிஜேஷ் இணைந்துள்ளார்.

ஆர்சிபி அணியில் டபிக்கு பதிலாக ஜோஷ் சேசில்வுட் இணைந்துள்ளார்.