ஐ.பி.எல்.

லக்னோ அணி கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகல்

லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 14 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 10 போட்டிகளில் தோல்வி அடைந்தது. இதனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாமல், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டமும் இம்முறை சரிவர அமையவில்லை. 13 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு அரை சதம் மட்டும் அடித்து 312 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர் தோல்விக்கு ரிஷப் பண்டின் மோசமான கேப்டன்சியும் காரணம் என கடுமையாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரிஷப் பண்ட் விலகி உள்ளார் என லக்னோ அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் கேட்டுக் கொண்டதாஅல் நாங்கள் அதற்கு ஒப்புதல் அளித்தோம் எனவும் தெரிவித்துள்ளது.