ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற ஆர்சிபி பவுலிங் தேர்வு: கொல்கத்தா முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் பெங்களூரு அணி 2-வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 57-வது லீக் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, கொல்கத்தா அணி முதலில் களமிறங்குகிறது.

மழை காரணமாக டாஸ் போடுவதில் ஒன்றரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

புள்ளிப் பட்டியலில் ஆர்சிபி அணி 2-வது இடத்திலும், கொல்கத்தா அணி 8-வது இடத்திலும் நீடிக்கிறது.

SCROLL FOR NEXT