ஐ.பி.எல்.

IPL 2026| சிஎஸ்கே அணியுடன் நாளை மோதல்... திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஆர்சிபி கேப்டன்

பெங்களூரு அணி தனது அடுத்த லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது.

திருப்பதி:

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 11-வது லீக் போட்டியில் நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார், ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மற்றொரு கிரிக்கெட் வீரரான ஜிதேஷ் சர்மாவும் ஏழுமலையானை வழிபட்டார்.

இதையடுத்து, கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் அவர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.