ஐ.பி.எல்.

IPL 2026 | ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி

ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் 2, 3-வது இடத்தைப் பிடித்துள்ளன.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 23 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று நடைபெற்ற ஆர்சிபி, லக்னோ அணிகள் மோதின. இதில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன. ஆர்சிபி அணி.

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆர்சிபி அணி ஒரு இடம் முன்னேறி முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தலா இரு வெற்றி பெற்றுள்ள சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா இரு வெற்றி பெற்று 4, 5, 6, 7, 8-வது இடத்தில் உள்ளன.

ஒரு வெற்றி மட்டும் பெற்ற மும்பை இந்தியன்ஸ் 9-வது இடம் பிடித்துள்ளது.

இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத கொல்கத்தா நைட்ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.