ஐ.பி.எல். தொடரின் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐதராபாத் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. விராட் கோலி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். வெற்றிக்கு பிறகு விராட் கோலி பேசியதாவது:
டி20 கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சமீப காலமாக நடந்து வரும் சர்வதேச ஒருநாள் தொடர்களில் அபாரமாக விளையாடி வருகிறேன். இதனால் என்னுடைய பேட்டிங் அப்படியே இருக்கிறது என நினைக்கின்றேன். அதில் கிடைத்த உத்வேகத்தை ஐபிஎல் தொடரிலும் கொண்டு வந்திருக்கிறேன்.
தேவையில்லாத ஷாட்களை என்றும் விளையாடியது கிடையாது. திரைமறைவுக்கு பின் கடுமையாக உழைத்து வருகிறேன். எனது உடல் தகுதியை பாதுகாக்க அதிக கவனம் செலுத்துகிறேன்.
பேட்டிங் பயிற்சி மற்றும் கடின உழைப்பு அனைத்தும் இணைந்து வந்து வெற்றியை தேடி தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தற்போது நல்ல ஒரு தொடக்கத்தை பெற்றெடுக்கின்றோம். இதையே அடித்தளமாக வைத்து இனிவரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும்.
எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க விரும்புகிறேன். ஒவ்வொரு போட்டியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நான் களத்திற்கு திரும்பி வரும்போது என்னுடைய 120 சதவீத பங்களிப்பை கொடுக்க வேண்டும்.
உடல் அளவில் நல்ல தகுதியுடன் இருக்கும்போது மனதும் சிறப்பாக இயங்கும். இது அனைத்தும் ஒன்றிணைந்து விளையாடும்போது அணியின் வெற்றிக்காக நம்மால் பங்களிக்க முடியும். இதைத்தான் ஒரு வீரராக நான் செய்ய விரும்புகிறேன். தொடர்ந்து அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும். தொடர்ந்து கடின உழைப்பை அணிக்காக வெளிப்படுத்த வேண்டும்.
இன்றைய ஆட்டத்தில் படிக்கல் சிறப்பாக விளையாடியுள்ளார். முதல் பந்தில் இருந்து அவர் அதிரடியை காட்டி ரன்களை சேர்த்தார்.
எதிரணியிடம் இருந்து ஆட்டத்தை படிக்கல் கவர்ந்து சென்று விட்டார். நான் அவரிடம் தொடர்ந்து இதே போல் விளையாடு என்று கூறினேன். இன்று அவருடைய பேட்டிங் உலகத்தரம் வாய்ந்ததாக இருந்தது என தெரிவித்தார்.