ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரகானே மற்றும் பின் ஆலன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ரன் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
3.5 ஓவரில் 50 ரன்னைத் தொட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் குவித்தது. பின் ஆலன் 17 பந்தில் 37 ரன்கள் விளாசினார்.
2-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் கேமரூன் கிரீன் ஜோடி சேர்ந்தார். கேமரூன் கிரீன் 10 பந்தில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு ரகானே உடன் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்தார். ரகானே 27 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 40 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
4-வது விக்கெட்டுக்கு ரகுவன்ஷி உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. ரகுவன்ஷி 29 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்கள் சேர்த்தது.
அடுத்து ரிங்கு சிங் உடன் ராமன்தீன் சிங் ஜோடி சேர்ந்தார். கடைசி ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் கொல்கத்தாவுக்கு 11 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்துள்ளது. ரிங்கு சிங் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7.5 ஓவரில் 100 ரன்களையும், 13.5 ஓவரில் 150 ரன்களையும், 18.1 ஓவரில் 200 ரன்களையும் தொட்டது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஷர்துல் தாகூர் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.