ஐ.பி.எல்.

ஐபிஎல் 2018- இளம் வயதில் அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார் பிரித்வி ஷா

கொல்கத்தா அணிக்கெதிராக 44 பந்தில் 62 ரன்கள் சேர்த்ததன் மூலம் இளம் வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார் பிரித்வி ஷா. #IPL2018 #DD

முதலில் களம் இறங்கிய டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா களம் இறங்கினார். இவர் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை கைப்பற்றியவர்.

இவர் டெல்லி அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கி 44 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். இது அவருடைய 2 ஐபிஎல் போட்டியாகும். 2-வது போட்டியிலேயே அரைசதம் அடித்ததுடன், இளம் வயதிலேயே ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் சாதனையுடன் ஒட்டிக் கொண்டார்.

SCROLL FOR NEXT