ஐ.பி.எல்.

கோலி, வெங்கடேஷ் அய்யர் அதிரடி: பஞ்சாப் வெற்றிபெற 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 61-வது லீக் போட்டி தரம்சாலாவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, ஆர்சிபி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப் பெத்தேல் 11 ரன்னில் அவுட்டானார். விராட் கோலியுடன் தேவ்தத் படிக்கல் இணைந்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில் படிக்கல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து 58 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து இறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியில் வெளுத்து வாங்கினார். அரை சதம் கடந்த வெங்கடேஷ் அய்யர் 48 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார்.

இறுதியில், ஆர்சிபி அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் களமிறங்குகிறது.

SCROLL FOR NEXT