ஐ.பி.எல்.

IPL 2026 | ஷ்ரேயாஸ் அதிரடி: ஐதராபாத்தை வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது பஞ்சாப்

முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 219 ரன்களை சேர்த்தது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி நியூ சண்டிகரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன்கள் சேர்த்தது. டிராவிஸ் ஹெட் 38 ரன்னில் அவுட்டானார். சிறப்பாக ஆடிய அபிஷேக் சர்மா 74 ரன்னில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 27 ரன்னில் வெளியேறினார். கிளாசன் 39 ரன்னில் அவுட்டானார்.

பஞ்சாப் கிங்ஸ் சார்பில் ஷஷாங்க் சிங், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டும், பார்ல்ட்லெட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர்.

பிரியான்ஷ் ஆர்யா 57 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஐதராபாத் அணி நடப்பு தொடரில் பெறும் 3வது தோல்வி இதுவாகும்.