ஐ.பி.எல்.

IPL 2026 | இறுதிக்கட்ட பரிசோதனை: சொந்த நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது காயம் தொடர்பான இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் பேட் கம்மின்ஸ், தனது காயம் தொடர்பான இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

மருத்துவப் பரிசோதனைகள் அனைத்தும் சாதகமாக அமையும் பட்சத்தில், அவர் வரும் ஏப்ரல் 17-ம் தேதி மீண்டும் ஐதராபாத் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2025 சீசனில் அணியை சிறப்பாக வழிநடத்திய கம்மின்ஸ் இல்லாதது, ஐதராபாத் அணியின் பந்துவீச்சு வரிசைக்கு ஒரு தற்காலிக பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அவர் 17-ம் தேதி திரும்புவது அணிக்கு மிகப்பெரிய பலமாக அமையும்.