ஐ.பி.எல்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே

மும்பை அணியில் இடம் பிடித்திருந்த பேட் கம்மின்ஸ்க்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நியூசிலாந்தின் ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார். #MI

ஐபிஎல் 11-வது சீசன் நடைபெற்று வருகிறது. தற்போது ஆட்டங்கள் பிஸியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இடம்பிடித்திருந்தார்.

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் விளையாடும்போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பேட் கம்மின்ஸ் ஓய்வு எடுக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியது. இதனால் பேட் கம்மின்ஸ் மும்பை அணியில் இடம்பெறவில்லை.

தற்போது அவருக்குப் பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம்பிடித்துள்ளார்.

SCROLL FOR NEXT