சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாட்டமாக நடந்துது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களுடன் தற்போதைய வீரர்களின் பயிற்சி மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
இசைக்கச்சேரியில் ரெய்னாவுக்கு பிடித்த பாடல் என கூறி 'முன்பே வா என் அன்பே வா' பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடினார். இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானை சந்தித்து பேசிய தோனி, 'முன்பே வா என் அன்பே வா' பாடல் எனக்கு பிடித்த பாடல், ரெய்னாவுக்கு அல்ல என்று கிண்டலாக தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.