ஐ.பி.எல்.

அடுத்த சீசனில் விளையாடுவீர்களா?: தோனி பதிலால் ஷாக் ஆன சுரேஷ் ரெய்னா

இந்த சீசன் முழுவதும் தோனி விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியிலும் கூட களமிறங்கவில்லை. கடைசி போட்டியிலாவது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த சீசன் முழுவதும் அவர் விளையாடாதது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், சி.எஸ்.கே. முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் அளித்த பேட்டியில் தோனியிடம் பேசிய விஷயங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:

நான் தோனியிடம், நீங்கள் நடப்பு ஐபிஎல் சீசன் முழுவதும் விளையாடவில்லை. எனவே இந்த சீசன் கணக்கில் வராது.

இது உங்களுடைய கடைசி சீசனாக இருக்கமுடியாது. எனவே அடுத்த ஐபிஎல் சீசனில் நீங்கள் நிச்சயமாக விளையாட வேண்டும் என கூறினேன்.

அதற்கு பதிலளித்த தோனி, எனது உடல்நிலை இப்பொழுது கொஞ்சம் பலவீனமாக உள்ளது. அதனால் என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியாது என்றார்.

ஆனால் நான் மீண்டும் அவரிடம், இதை நம்ப நாங்கள் தயாராக இல்லை. நீங்கள் அடுத்த சீசன் கண்டிப்பாக விளையாடியே ஆக வேண்டும். ரசிகர்களும் நீங்கள் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூறினேன்.

அதற்கு தோனி, பார்க்கலாம் என்றார். அவர் அப்படி கூறியதன்மூலம் கண்டிப்பாக அடுத்த சீசனில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. அதனை நாங்களும் எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.