சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரீ யூனியன் நிகழ்ச்சி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று கொண்டாட்டமாக நடந்துது. சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் வீரர்களுடன் தற்போதைய வீரர்களின் பயிற்சி மற்றும் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சர்பராஸ் கானின் குழந்தையை தூக்கி எம்.எஸ்.தோனி கொஞ்சினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மினி ஏலத்தில் சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.