MS Dhoni 
ஐ.பி.எல்.

IPL 2026 CSK | எம்.எஸ். தோனி ஏப்ரல் கடைசி வரை விளையாட வாய்ப்பு இல்லையாம்..!

எம்.எஸ். தோனி முதல் இரண்டு வாரங்கள் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் கடைசி வரை விளையாட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி ஐபிஎல் 2026 தொடருக்காக தயாராகிக் கொண்டிருந்தார். நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், எம்.எஸ். தோனிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு வாரங்கள் விளையாடமாட்டார் என்ற செய்தி சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இரண்டு வாரங்கள் என்றால், ஐந்து போட்டிகளில் எம்.எஸ். தோனி விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் கடைசி வாரம் வரை அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காயம் சரியாக, பயிற்சி மேற்கொள்ள கூடுதல் நாட்கள் ஆகும் என்பதால் அவரால் ஏப்ரல் கடைசி வரை விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது.

அப்படி அவர் ஏப்ரல் கடைசி வரை விளையாடவில்லை என்றால், ஏப்ரல் 23-ந்தேதி மும்பைக்கு எதிராக நடைபெறும் போட்டியில் எம்.எஸ். தோனியால் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். 14 போட்டிகளில் 8 போட்டிகளில் விளையாடமாட்டார்.