நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 60 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று இரு போட்டிகள் நடைபெறுகின்றன.
பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் 200 ரன்களைக் குவித்து வருகின்றது.
நடப்பு தொடரில் 250 ரன்களுக்கு அடிக்கப்படும் ரன்களையும் எதிர் அணி சேஸ் செய்து வருகிறது.
இன்று மதியம் நடந்த ஐபிஎல் தொடரின் 61-வது போட்டியில் முதலில் ஆடிய ஆர்சிபி அணி 222 ரன்கள் குவித்தது.
அதன்படி, 2022ம் ஆண்டில் 18 முறை 200 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளது. 2023-ல் 37 முறையும், 2024-ல் 41 முறையும், 2025-ல் 52 முறையும் 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளன.
இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடர் 53 முறை 200 ரன்களைக் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.