ஐதராபாத்:
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 25-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 6 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, பஞ்சாப் அணி 133 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது. ஆனால், ஐதராபாத் அணியினர் துல்லியமான பந்துவீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியது. இறுதியில் பஞ்சாப் அணி 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, ஐதராபாத் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியை சேர்ந்த மனோஜ் திவாரி ஒரு ஓவர் வீசினார். திவாரி பந்துவீசும் போது அவரது செய்கை மலிங்கா பந்துவீசுவதை போல் இருந்தது. ஆனால் அவர் அதே பாணியில் மெதுவாக பந்துகளை வீசினார். இதையடுத்து டுவிட்டரில் ரசிகர்கள் பந்துவீசுவது மனோஜ் திவாரியா? அல்லது மலிங்காவா? என கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர். ஒரு சிலர் சென்னை அணி வீரர் கேதார் ஜாதவ் பந்துவீசுவது போல் இருப்பதாகவும் கருத்து கூறினர். #VIVOIPL #ManojTiwary #KingsXIPunjab #Malinga