ஐ.பி.எல்.

IPL 2026 | டாஸ் வென்ற லக்னோ பவுலிங் தேர்வு: சென்னை முதலில் பேட்டிங்

புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 5-வது இடத்தில் நீடிக்கிறது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 59-வது லீக் போட்டி லக்னோவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் லக்னோ அணி கேப்டன் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, சென்னை அணி முதலில் களமிறங்குகிறது.

புள்ளிப் பட்டியலில் சென்னை அணி 5-வது இடத்திலும், லக்னோ அணி 10-வது இடத்திலும் நீடிக்கிறது.