ஐ.பி.எல்.(IPL)

கிருஷ்ணப்பா கவுதம் 11 பந்தில் 33 ரன்கள் குவித்தது வாழ்நாளின் சிறந்த அனுபவம்- சஞ்சு சாம்சன்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கிருஷ்ணப்பா கவுதம் 11 பந்தில் 33 ரன்கள் குவித்தது வாழ்நாளின் சிறந்த அனுபவம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். #IPL2018 #RRvMI

மாலை மலர்

11 பந்துகளில் 33 ரன்கள் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் கிருஷ்ணப்பா கவுதமை, அந்த அணியின் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் பாராட்டி இருக்கிறார்.

அவர் அளித்த பேட்டியில் ‘‘கவுதம் ஆட்டம் அற்புதமாக இருந்தது. அந்த ஆட்டம் அவருக்கு மட்டுமின்றி எங்களுக்கும் வாழ்நாளில் சிறந்த அனுபவமாகும். கவுதமுக்கு ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என்று நான் நினைத்தேன். அணிக்கு எல்லோருடைய பங்களிப்பும் முக்கியமானதாகும்.