ஐ.பி.எல்.

IPL 2026 KKR vs PBKS | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ஈடன் கார்டன் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் நிலையில், ரகானே பேட்டிங் தேர்வு செய்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

ஐ.பி.எல். 2026 சீசனில் 12-வது போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா தான் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. பஞ்சாப் அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க விளையாடும். பஞ்சாப் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க விளையாடும். இதனால் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையலாம்.