ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் - ரகானே களமிறங்கினர். இதில் ஆலன் 9 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ரகானே - ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ரகானே 41 ரன்னிலும் ரகுவன்ஷி 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வந்த ரிங்கு சிங் 4 அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த கீரின் மந்தமாக விளையாட மறுமுனையில் இருந்த ரோவ்மன் பவல் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
இதில் பவல் 39 ரன்களிலும் கீரின் 32 ரன்களிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.