ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இதுவரை 63 போட்டிகள் நிறைவடைந்துள்ளன.
நேற்று சென்னையில் நடைபெற்ற 63-வது லீக் போட்டியில் ஐதராபாத், சென்னை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சென்னை அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஐதராபாத் 181 ரன்கள் எடுத்து வெற்றி எற்றது.
ஐதராபாத் சார்பில் இஷான் கிஷன் 70 ரன்னும், ஹென்ரிச் கிளாசன் 47 ரன்னும் ரன்னும் எடுத்தனர்.
இந்நிலையில், ஹென்ரிச் கிளாசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து மீண்டும் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி உள்ளார். இவர் 13 ஆட்டங்களில் 555 ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்தில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் 554 ரன்னும், 3வது இடத்தில் குஜராத்தின் சுப்மன் கில் 552 ரன்னும் குவித்துள்ளனர்.