ஐ.பி.எல்.

IPL 2026 | ஆட்ட நாயகன் விருது: ஜடேஜா சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்

டெல்லி அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 40 பந்தில் 75 ரன்கள் குவித்தார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் 43வது லீக் போட்டி நேற்று நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவரில் 226 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 40 பந்தில் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார். ஆட்ட நாயகன் விருது அவருக்கு அளிக்கப்பட்டது. இது அவரது 17வது ஆட்ட நாயகன் விருது ஆகும்.

இந்நிலையில், ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்தியர்களில் ஜடேஜாவின் சாதனையை கே.எல்.ராகுல் சமன் செய்தார். இருவரும் 17 முறை ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 21 , விராட் கோலி 20, எம்.எஸ்.தோனி 18 என முதல் 3 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT