ஐ.பி.எல்.

IPL 2026: 47 பந்தில் சதமடித்த கே.எல்.ராகுல்

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 35-வது லீக் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கியது. பதும் நிசங்கா, கே.எல்.ராகுல் ஜோடி 28 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 11 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து கே.எல்.ராகுலுடன் நிதிஷ் ராணா இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது.

பொறுப்புடன் விளையாடிய கே எல் ராகுல் 47 பந்தில் சதமடித்து அசத்தினார்.