ஐ.பி.எல்.

IPL 2026 | மிடில் ஆர்டர் சொதப்பல்: கொல்கத்தா வெற்றிபெற 166 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஐதராபாத்

டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 45-வது லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ச்ர்மா 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 42 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஐதராபாத் அணி 19 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், சுனில் நரேன் 2ம் கார்த்திக் தியாகி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து,166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா களமிறங்குகிறது.