ஐ.பி.எல். 2026-ன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 போட்டிகளில் 6-ல் வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லை என்பதன் மூலம் 13 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி போட்டியில் வருகிற 24-ந்தேதி டெல்லி அணியை எதிர்கொள்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றால், பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள முடியும்.
இந்தநிலையில் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான ரகுவன்ஷி காயம் காரணமாக அணியில் இருந்து வலகியுள்ளார். இது கொல்கத்தா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கேட்ச் பிடிக்க முயன்றபோது, இடது கையில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.