ஐபிஎல் தொடரின் 19-வது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் குவித்தது. இதனையடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவரில் 224 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேனுக்கு (வெஸ்ட் இண்டீஸ்) 190-வது ஆட்டமாகும். இதன் மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ஆட்டங்களில் விளையாடிய வெளிநாட்டு வீரர் என்ற சிறப்பை பெற்றார். இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) 189 ஆட்டங்களில் ஆடியதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.