ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 227 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் சதமடித்து 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 18.4 ஓவரில் 230 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடம்பிடித்து குவாலிபையர் 1 சுற்றுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. ஜித்தேஷ் சர்மா 33 பந்தில் 85 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியில் 16 ஆவது ஓவரை வீசிய திக்வேஸ் ரதி ஜித்தேஷ் சர்மாவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். ஆனால் ரிஷப் பண்ட் அந்த விக்கெட்டை வேண்டாம் என்று பெருந்தன்மையாக மறுத்து விடுவார். இதனையடுத்து ரிஷப் பண்ட்-ஐ ஜித்தேஷ் கட்டியணைத்து நன்றி கூறுவார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
This Digvesh Rathi not only issues challans... but is also a fraud..."Digvesh Rathi" #RCBvsLSG "Jitesh Sharma" "Digvesh Rathi" #RCBvsLSG "Rishabh Pant" Render Digvesh "Jitesh Sharma" "And Putin" #IPL25@StarSportsIndia pic.twitter.com/2C1Rr4P1qU